புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சியராக இருப்பவர் பூர்வா கார்க். அவரது அலுவலக சிறப்பு அலுவலர் சுரேஷ்ராஜ் என்பவர், புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பெண் ஆட்சியருக்கு நச்சுத் தண்ணீர் வழங்கப்பட்டதாகப் புகார் - கிரண் பேடி அதிர்ச்சி! - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பெண் ஆட்சியருக்கு நச்சுத் தன்மை கொண்ட தண்ணீர் வழங்கப்பட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரால் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெண் ஆட்சியருக்கு நச்சுத் தண்ணீர்
அப்புகார் மனுவில், நேற்று (ஜன.6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆட்சியர் பூர்வா கார்கிற்கு பாட்டில் குடி தண்ணீர் வழங்கப்பட்டது. அந்த தண்ணீரில் நச்சுத் தன்மை கொண்ட திரவம் கலந்து இருந்தாகவும் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்
Last Updated : Jan 8, 2021, 10:51 PM IST