தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் பிரதமர் மோடி பேரணி... தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள்... - குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது பிரதமர் நரேந்திர மோடி விதிகளை மீறி பேரணியாக சென்றதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

குஜராத்தில் பிரதமர் மோடி பேரணி
குஜராத்தில் பிரதமர் மோடி பேரணி

By

Published : Dec 5, 2022, 10:15 PM IST

அகமதாபாத்:குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிசம்பர் 5) நடந்தது. இந்த வாக்குப்பதிவின்போது பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் உள்ள வாக்குச்சாடியில் வாக்களித்தார். இதையடுத்து சாலையில் பேரணியாக சென்றார். இதனால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி விதிகளை மீறி பேரணியாக சென்றதாக குற்றம்சாட்டியுள்ளன.

இந்த பேரணி அகமதாபாத்தில் உள்ள 13 தொகுதிகளிலும், காந்திநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் சென்றதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாக்குப்பதிவு நாளில் மற்ற கட்சிகளுக்கு பேரணிக்கு அனுமதி கிடையாது.

ஆனால், பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சி விவிஐபிக்கள் எதையும் செய்யலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளை நாங்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்று கொல்கத்தா விமான நிலையத்தில் தெரிவித்தார். இதனிடையே தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் யோகேஷ் ரவானி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:முழு விவரம்: குஜராத், ஹிமாச்சலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

ABOUT THE AUTHOR

...view details