தமிழ்நாடு

tamil nadu

ராமன் பக்தனை ராவணனுடன் ஒப்பிடுவதா? - கார்கேவுக்கு பிரதமர் மோடி பதில்!

By

Published : Dec 1, 2022, 2:05 PM IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராமன் பக்தனான தன்னை ராவணனுடன் ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

ராமன் பக்தனை ராவணனுடன் ஒப்பிடுவதா? - கார்கேவுக்கு பிரதமர் மோடி பதில்
ராமன் பக்தனை ராவணனுடன் ஒப்பிடுவதா? - கார்கேவுக்கு பிரதமர் மோடி பதில்

குஜராத்:பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மீது நாட்டு மக்களின் பார்வை திரும்பியுள்ளது. காரணம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தல் ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று முதற்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள் அனல் பறக்க பரப்புரையில் ஈடுபட்டனர்.

இதனிடையே நேற்று முன்தினம் அகமதாபாத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அப்போது, "இன்னும் எத்தனை காலம்தான் ஏழையின் மகன், டீ விற்பனை செய்தேன் என்று கூறி மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? நான் ஏழையாக பிறந்தது மட்டுமல்லாது தீண்டாமைக்கும் ஆளானவன். நீங்க வித்த டீயையாவது மக்கள் வாங்கி குடித்தனர். ஆனால் என்னை யாரும் தொடக்கூட யோசித்தனர். தயவு செய்து உங்கள் நாடகத்தை நிறுத்துங்கள். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்க்கிறோம்? உங்களிடம் எத்தனை அவதாரங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் உள்ளதா?” என்று கார்கே கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் கார்கேவின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.

குஜராத்தின் பஞ்சமகாலில் பேசிய பிரதமர் மோடி, ”காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் அக்கட்சியின் மனநிலை சமநிலையில் இல்லை. நான் கார்கேவை மதிக்கிறேன். ராமன் பக்தனான என்னை ராவணனுடன் ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது. ராமர் சேது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் சிக்கல்தான்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளரின் கார் மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details