தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காதலை மறுத்த பெண்' கல்லூரி வளாகத்தில் கொடூரக்கொலை - குற்றச் செய்திகள்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜு என்ற வாலிபர் காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொடூரக்கொலை
கொடூரக்கொலை

By

Published : Oct 1, 2021, 5:54 PM IST

Updated : Oct 1, 2021, 7:10 PM IST

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரி வளாகத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் வைகோம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணான நிதின்மோல் இக்கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்துவருகிறார்.

இவரை அதே கல்லூரியைச் சேர்ந்த அபிஷேக் பைஜு என்ற 21 வயது வாலிபர் காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் அபிஷேக் தொடர்சியாக காதலைக் கூறிவர, பெண்ணோ காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் தேர்வுக்காக கல்லூரி வந்துள்ளனர். தேர்வை முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்துகொண்டிருந்தபோது, பேனா கத்தி ஒன்றை பயன்படுத்தி அபிஷேக் அந்தப் பெண்ணை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துள்ளார்.

இளம்பெண் நிதின்மோல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அபிஷேக்கை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பட்டப்பகலில் கல்லூரி வளாகத்தில் வைத்து இளம்பெண்ணை சக மாணவரே கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம், ஒட்டுமொத்த கேரளாவையே உலுக்கியுள்ளது.

இதையும் படிங்க:பனிப்புயலில் சிக்கி ஐந்து விமானப்படை வீரர்கள் மாயம்

Last Updated : Oct 1, 2021, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details