தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சிஎம்ஆர் மானியத் தொகை ரூ. 4,446.14 கோடியை உடனடியாக வழங்குக' - மு.க. ஸ்டாலின் - டெல்லியில் பியூஷ் கோயல்

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் சிஎம்ஆர் மானியத் தொகை ரூ.4 ஆயிரத்து 446.14 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிஎம்ஆர் மானியத் தொகை
சிஎம்ஆர் மானியத் தொகை

By

Published : Apr 2, 2022, 10:44 AM IST

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வணிகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேற்று (ஏப். 1) டெல்லியில் சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டின் வணிகம் மற்றும் தொழில் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள்:

முதலமைச்சர் ஸ்டாலின் - ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
  1. தமிழ்நாட்டிற்கு மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைத்திட அனுமதி.
  2. காலணி உற்பத்தி தொழிலில், புதிய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம்
  3. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் உற்பத்தித்திறன் அதிகரிப்பு – ACC
  4. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உப்புத் துறையின் நிலங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு (TIDCO) மாற்றுதல்
  5. எஃகு விலையைக் கட்டுப்படுத்துதல்
  6. புழுங்கல் அரிசிக்கு பச்சரிசி பரிமாற்றம்
  7. ஒன்றிய அரசிடமிருந்து அரைக்கப்பட்ட அரிசிக்கு (Custom Milled Rice) மானியம் கோருதல்
  8. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் 2018-2019 முதல் 2022-2023 வரையிலான நிதியாண்டுகளுக்கான சிஎம்ஆர் மானியத் தொகை
    மொத்தம் ரூ.4 ஆயிரத்து 446.14 கோடி ரூபாய் இன்னும் இந்திய அரசால் வழங்கப்படாமல் உள்ளது, இதனை உடனடியாக வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: எங்கள் பள்ளியை பார்வையிட வாருங்கள்... கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பு...

ABOUT THE AUTHOR

...view details