தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜூன் 17இல் ஸ்டாலின்-பிரதமர் சந்திப்பு! - டெல்லியில் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றபின், முதன் முறையாக பிரதமர் மோடியை வரும் ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் சந்தித்துப்பேசுகிறார்.

முக ஸ்டாலின், ஸ்டாலின், STALIN, MK STALIN, மோடி, பிரதமர் மோடி, MODI, PM MODI, CM STALIN, DMK, BJP, திமுக, பாஜக, ஸ்டாலினை சந்திக்கும் மோடி, மோடியை சந்திக்கும் ஸ்டாலின், ஸ்டாலின் டெல்லி பயணம், டெல்லியில் ஸ்டாலின், மோடி ஸ்டாலின் சந்திப்பு
ஸ்டாலினுக்கு பத்தரை மணிக்கு நேரம் ஒதுக்கிய மோடி

By

Published : Jun 15, 2021, 12:09 PM IST

Updated : Jun 16, 2021, 7:28 PM IST

சென்னை: கடந்த மே7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் எளிமையான முறையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்டாலின். கடந்த ஒரு மாத காலமாக கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவந்தது.

பத்தரை மணிக்கு பிரதமர் இல்லத்தில்

இந்நிலையில், பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழ்நாடு அரசு சார்பில் நேரம் கேட்ட நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஜூன் 17ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சந்தித்துப் பேசுகிறார்.

இச்சந்திப்பின்போது செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி அளிப்பது, கரோனா சிறப்பு நிவாரண நிதிப் பங்கீடு, தடுப்பூசியை அதிக அளவில் ஒதுக்குவது உள்ளிட்ட தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடிக்குப் பின் சோனியா

தொடர்ந்து டெல்லியில் கட்டப்பட்டுவரும் திமுக கட்சி அலுவலகத்தை அன்று மதியம் பார்வையிடுகிறார். ஜூன் 18ஆம் தேதி காலை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்து வாழ்த்துப்பெறுகிறார்.

இதையும் படிங்க: மக்களுக்கு அள்ளிக் கொடுத்த மக்கள் செல்வன்

Last Updated : Jun 16, 2021, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details