தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’முதலமைச்சர் குணமான பிறகே அமைச்சர்கள் பதவியேற்பு’ - பாஜக தலைவர் சாமிநாதன் - அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரி முதலமைச்சர் குணமடைந்த பின்னர் தான் அமைச்சர்களின் பதவியேற்பு நடைபெறும் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் சுவாமிநாதன்
பாஜக தலைவர் சுவாமிநாதன்

By

Published : May 11, 2021, 3:31 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நேற்று வெங்கடேசன், ராமலிங்கம், ரமேஷ் பாபு ஆகிய மூன்று பேரையும் மத்திய அரசு நேரடியாக நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தது. இது குறித்து கூட்டணிக் கட்சிகளுக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும். கரோனா சிகிச்சை முடிந்து முதலமைச்சர் ரங்கசாமி வந்த பிறகே அமைச்சரவை விரிவாகும், பதவி ஏற்பு விழாவும் நடைபெறும்.

புதுச்சேரியில் யூகங்களுக்கு இடமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதிய பலம் இருக்கிறது. தங்களது தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் குழப்பமில்லை” என்றார்.

இதையும் படிங்க:மாஸ்க் போடலனா டோக்கன் கிடையாது: ரேஷன் கடை ஊழியர்கள் கண்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details