புதுச்சேரி:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடரும் என புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இது புதுச்சேரி ஆளும் கட்சி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில அந்தஸ்து போராட்டக் குழுவினர் தலைவர் நேரு தலைமையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பினர். மேலும், பல கட்ட போராட்டங்களை நடத்தி மத்திய அரசிடம் சென்று வலியுறுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் 516 பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு!
இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் பேசியதாவது, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுத்துள்ளது. மாநில அந்தஸ்து கேட்பது நம்முடைய உரிமை. அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிறோம்.