பாட்னா: ’பிகார் மரம் பாதுகாப்பு தினம்’ எனும் நிகழ்ச்சியில் பிகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று (ஆக 11) கலந்துகொண்டார். அதில் மரத்திற்கு ராக்கி கட்டிய நிதிஷ் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ எல்லோரும் தங்கைகளைப் பாதுகாக்கும் விதமாக இந்த ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
ஆனால் அத்துடன் சேர்த்து நாம் நம் மரங்களையும் பாதுகாக்க வேண்டும்” என்றார். நீங்கள் பிரதமர் வேட்பாளராகலாம் என அனைவரும் பேசிக் கொள்கின்றனரே என செய்தியாளர்கள் கேட்டக் கேள்விக்கு “நாம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். எனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை. நான் அனைவருக்காகவும் வேலை செய்ய வேண்டுமென நினைக்கிறேன்” என்றார்.