ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை 2023, வருகிற ஜனவரி 13 முதல் 29 வரை புபனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளன.
குறிப்பாக புபனேஸ்வரில் 24 போட்டிகளும், ரூர்கேலாவில் 20 போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் சர்வதேச அளவில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒடிசாவில் நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை 2023க்கான முதல் டிக்கெட்டை இந்திய ஹாக்கியின் தலைவர் திலீப் திர்கேவிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.