தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு! மாலையில் பிரதமருடன் சந்திப்பு - CM MK Stalin At delhi

டெல்லி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று மாலை அவர் சந்தித்து பேசுகிறார்.

டெல்லியில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
டெல்லியில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

By

Published : Jun 17, 2021, 10:22 AM IST

Updated : Jun 17, 2021, 3:47 PM IST

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமரை சந்திக்கிறார்.

இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையும் படிங்க:டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு

இதனைத்தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி , கரோனா சிறப்பு நிவாரண நிதிப் பங்கீடு, தடுப்பூசியை அதிகளவில் ஒதுக்குவது, நீட் தேர்வு உள்ளிட்ட 35 முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமருடன் மு.க.ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்

Last Updated : Jun 17, 2021, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details