ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில்பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணத வெற்றியை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் சிங் மான் இன்று பதவியேற்கிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
பகவந்த் மானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... - Punjab CM today
பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவியேற்கும் பகவந்த் மானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ஒன்றியங்களிலேயே தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களுக்கு மட்டுமே மொழிவாரி உரிமைகளுக்கும், மாநில உரிமைகளுக்கும் குரல் கொடுத்த வரலாறு உள்ளது. அத்தகைய பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக பதவியேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு வெற்றியடைய வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதவியேற்பு விழா சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த கிராமமான கட்கர் கலனில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருப்பது மகிழ்ச்சி - ஸ்டாலின்