புதுச்சேரி மீன்வளம், மீனவர் நலத் துறையில் சிறு தொழில் மீனவர்களுக்கான மானிய உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் கீழ் 2020-21ஆம் ஆண்டிற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூலை19) நடைபெற்றது.
புதுச்சேரி மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், 15 பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் கண்ணாடி நுண்ணிழை இயந்திரம் இல்லா கட்டுமரம் வாங்குவதற்கான நிதி வழங்கப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி மீனவர்களிடம் நிதியை வழங்கினார்.