ராஜஸ்தான் (பன்ஸ்வாரா): 1913 ஆம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில் 'மங்கார் தம் கி கவுரவ் கதா' என்ற பெயரில் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு செல்லும் போது, அவருக்கு அதிகளவு மரியாதை கிடைக்கிறது. காரணம், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக ஓடும் மகாத்மா காந்தி பிறந்த நாட்டின் பிரதமராக இருப்பதால் அவருக்கு மரியாதை கிடைக்கிறது.