ஜெய்ப்பூர்: காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த அகமது படேல் கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் பைசல் அகமது படேல் காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தான் தீவிர அரசியலில் சேரப் போவதில்லை என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றப் போவதாகவும் பைசல் படேல் கூறயிருந்தார். அதன் பிறகு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்களுக்கு பணி செய்வது பைசல் படேலுக்கு சிக்கலானதாக தெரிகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் தன்னால் மக்கள் பணி செய்ய முடியவில்லை என்றும், இடையூறுகள் இருப்பதாகவும் பைசல் படேல் அதிருப்தி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் செயலாளர் ஷஷிகாந்த் சர்மா, தனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, ராஜஸ்தானில் உள்ள ஏழை சிறுபான்மை மக்கள் தன்னை சேவை செய்ய தொடர்ந்து அழைக்கிறார்கள் என்றும், அவர்கள் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றும் பைசல் படேல் குறிப்பிட்டிருந்தார். இருந்த போதும், சிறிது நேரத்தில் பைசல் படேல் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
இதையும் படிங்க:பொதுக்கூட்டத்திற்கு சென்ற தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்....விஜயவாடா சாலையில் போக்குவரத்து நெரிசல்