தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிறிஸ்துமஸ் பண்டிகை: திருப்பலியில் பங்கேற்ற முதலமைச்சர்!

புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

By

Published : Dec 25, 2020, 9:52 AM IST

இயேசு கிறிஸ்து பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. புதுச்சேரி உள்ள அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள ஜென்மராக்கினி பேராலயத்தில் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்த ராயர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் ஆலயத்தில் சிறப்பு குடிலில் இயேசுவின் பிறப்பு குறித்த சிறப்பு சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசின் கரோனா வழிகாட்டுதல் விதிமுறைகளுடன் தகுந்த இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தில் நுழைவதற்கு முன், பக்தர்களுக்கு சனிடைசர் வழங்கப்பட்டது, உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது.

திருப்பலியில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி

முதலமைச்சர் நாராயணசாமி ஜென்மராக்கினி பேராலயத்தில் சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கத்துக்கு மாறாக தேவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details