தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாட்டு வரியா... இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! - மாட்டு அமைச்சகம்

போபால்: அரசு நிதியை தவிர்த்து மாடுகளின் பாதுகாப்பில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் மாட்டு வரி விதிக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர்
மத்தியப் பிரதேச முதலமைச்சர்

By

Published : Nov 22, 2020, 4:52 PM IST

உலகிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேசத்தில் மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் மாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு, வனத்துறை, பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி, வீடுகள் மற்றும் விவசாய நலத்துறை ஆகியவை மாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோபாஷ்டமியை முன்னிட்டு மாட்டு அமைச்சகத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீட்டிலிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாடுகளின் வளர்ப்புக்காக நிதி திரட்டும் வகையில் மாட்டு வரி விதிக்க திட்டமிட்டு வருவதாக மத்தியப் பிரசேத அரசு தெரிவித்தது.

அரசு நிதியை தவிர்த்து மாடுகளின் பாதுகாப்பில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் மாட்டு வரி விதிக்கப்படும் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, அவர் மாடுகளுக்கு அல்வா ரொட்டி வழங்கினார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெண் குழுந்தைகளுக்குக் கூட பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கி தரமுடியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தினமும், நான்கு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாடுகளின் பாதுகாப்புக்காக மாட்டு வரி விதிக்கப்படும் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details