டெல்லி:குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி அருணாசலப் பிரதேச சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் கலந்துகொண்டார்.
இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளைச் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும். அருணாசலப் பிரதேசத்திற்கு இந்தியத் தலைவரின் வருகையை சீனா உறுதியாக எதிர்க்கிறது" எனக் கூறியிருந்தது.
இது எங்கள் பூமி
ஏனென்றால், சீனா நீண்ட காலமாக அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஓர் பகுதியாகதான் கருதிவருகிறது. இதனால், அருணாசலப் பிரதேசத்திற்குத் தலைவர்கள் வருகைதரும் போதெல்லாம் சீனா கண்டனம் தெரிவித்துவந்தது.
சீனாவின் கூற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது, "சீனாவின் இதுபோன்ற கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது.