டெல்லி:பிரதமர் நரேந்திர மோடிஜனவரி 3ஆம் தேதி முதல் 15 -18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும்பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள, சிறார்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களிடம் கோவாக்சின் தடுப்பூசி ஆய்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிறார்களுக்கு ரத்தம் உறைதல், வீக்கம் உள்பட எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அதன்படி இரண்டாம், மூன்றாம் கட்ட ஆய்வுகளின் முடிவில், சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.