தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் நாராயணசாமி...! - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில், முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

corona vaccine process in Pondicherry
corona vaccine process in Pondicherry

By

Published : Jan 16, 2021, 1:02 PM IST

Updated : Jan 16, 2021, 5:25 PM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஜனவரி 16) தொடக்கி வைத்தார். அப்போது, முனுசாமி என்ற மருத்துவ பணியாளர் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

corona vaccine process in Pondichery

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மத்திய அரசு நிறுவன ஊழியர்கள் என ஒன்பதாயிரம் பேர் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் 24 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார்.

இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களான அரசுத் துறைகளை ஊழியர்கள், அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், மூன்றாம் கட்டமாக 50 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருப்பவர்களுக்கு செலுத்தப்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஐந்து இடங்களிலும், காரைக்காலில் மூன்று இடங்களிலும் மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Last Updated : Jan 16, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details