ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மதபோதகர் ஹரிஸ் சாகு, மதமாற்றத்தில் ஈடுபடுவதாக வலதுசாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின்பேரில், புரானி பாஸ்தி காவல் நிலைய காவலர்கள் போதகர் சாகுவை காவல் நிலையம் அழைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மதபோதகர் ஹரிஸ் சாகு, சத்தீஸ்கர் கிறிஸ்தவ மன்றத்தின் செயலாளர் அங்குஷ் பரியேகர் உள்ளிட்ட இரண்டு பேருடன் காவல் நிலையம் வந்துள்ளார்.
அங்கு ஏற்கனவே இருந்த வலதுசாரிகள், சாகு உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான போதகர் சாகு கொடுத்த புகாரின்பேரில், பலர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், கபீர்தாம் மாவட்டத்திலும் மதபோதகர் ஒருவரை, வலதுசாரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை சீண்டிய மதபோதகர் கைது