சூரஜ்பூர்:சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலியை சேர்ந்த சிறுமியை ஒரு காவலர் உட்பட மூன்று பேர் பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் குடும்பத்தார் இரண்டு தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமி மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்த நிவையில் இன்று (ஏப்ரல் 23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி மகளிர் சிறப்பு டிஎஸ்பி கீதா வத்வானி, "இன்று காலை 10 மணி அளவில் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட தகவலில் தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்" என்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் துறையின் மெத்தனப் போக்கே சிறுமியின் மரணத்திற்குக் காரணம். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனது மகள் தற்கொலை செய்துகொண்டால் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உடல் - கொலையா? தற்கொலையா?