ராய்ப்பூர்: 2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட், “திசையில்லாத பட்ஜெட்” என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் (Bhupesh Baghel) விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இது ஒரு திசையில்லாத பட்ஜெட். இந்தப் பட்ஜெட்டில் இளைஞர்கள், பெண்கள் மேம்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு மற்றும் ஸ்மார்ட் (சீர்மிகு) சிட்டி (நகரங்கள்) உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை” என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2022 பட்ஜெட்டில், “அரசின் நிதிப் பற்றாக்குறை 6.4 விழுக்காடு ஆக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் கரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முற்போக்கு பட்ஜெட்- யோகி ஆதித்யநாத்!