சத்தீஸ்கர்:ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களின் சட்டசபை காலம் முடிவடைவதை அடுத்து, 5 மாநிலத்தின் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் மொத்தம் 90 சட்டப்பேரவைகளைக் கொண்டதால், இரண்டு கட்டங்களாக, அதாவது முதல் கட்டமாக நவம்பர் 7ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 17ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று (நவ.7) காலை 7 மணிக்கு சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இதனையடுத்து, காலை 9 மணி நிலவரப்படி 9.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 40 லட்சத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.