கடந்த 3ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் உள்ள வனப்பகுதியில் என்கவுன்டர் நடத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 22 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலனாய்வு அமைப்புகளின் தோல்வி இத்தாக்குதலுக்கு காரணம் அல்ல என மத்திய ரிசர்வ் காவல் படை இயக்குநர் குல்தீப் சிங் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், மோசமான திட்டமிடுதலும் நக்சல்களுக்கு எதிராக ஈடுகொடுக்க முடியாததும் பிஜாபூர் தாக்குதலுக்குக் காரணம் என ராகுல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இது புலனாய்வு அமைப்புகளில் தோல்வி இல்லை என்றால், இருதரப்பிலும் சமமான அளவில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது என்பது மோசமான திட்டமிடுதலையும் நக்சல்களுக்கு எதிராக ஈடுகொடுக்க முடியாததும் காட்டுகிறது. நமது ராணுவ வீரர்கள் போருக்கு காவு கொடுப்பதற்கு அல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, என்கவுன்டர் குறித்து பேசிய மத்திய ரிசர்வ் காவல் படை இயக்குநர் குல்தீப் சிங், "புலனாய்வு அமைப்புகளின் தோல்வி அவர்கள் செயல்படவில்லை என்று கூறுவதில் நியாயம் இல்லை. புலனாய்வு அமைப்புகளின் தோல்வி என்றால் என்கவுன்டரை மேற்கொள்ள பாதுகாப்புப் படையினர் சென்றிருக்க மாட்டார்கள். பல நக்சல்களைக் கொன்றிருக்கு முடியாது" என்றார்.