ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):சத்தீஸ்கர் மாநிலத்தில், பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப்பேரவையில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதி நாள் கூட்டம் நேற்று (ஜூலை 21) நடைபெற்றது. அப்போது, ஆளும் காங்கிரஸ் அரசு, ஊழல் மற்றும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி 109 அம்ச குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சர் பூபேஷ் பாகல் தனது அரசின் சாதனைகளை விளக்கினார். இவ்வாறு முதலமைச்சர் தனது உரையை முடிக்கும் முன்பே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். இதன் பின்னர், 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 71 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், 13 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக கொண்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான குரல் வாக்கெடுப்பில் இருந்து மீண்டது.
இதனால், நேற்று நள்ளிரவு 1 மணி வரை நீடித்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதியில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தனது ஆட்சியை நிலைநிறுத்தி உள்ளது. முன்னதாக, நேற்று மதியம் தொடங்கிய இந்த விவாதத்தின்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்ட ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது தொடர்பான குற்றச்சாட்டுக்கு கருவூல தரப்பு மறுப்பு தெரிவித்தது.
அப்போது அவையில் பேசிய முதலமைச்சர் பூபேஷ பாகல், ''எதிர்க்கட்சியினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உண்மைக்கு பற்றாக்குறை உள்ளது. இதன் மூலம் அரசின் சாதனைகளை சட்டப்பேரவையில் கூற ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பல திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி உள்ளது.
மாநிலத்தில் உள்ள தாலுகாக்கள் அதிகரித்து உள்ளன. தனி நபர் வருமானம் அதிகரித்து உள்ளது. நெல் கொள்முதல் 56 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்து 110 டன் என்ற நிலைக்கு அதிகரித்து உள்ளது. ராஜீவ் காந்தி நீதித் திட்டம் மற்றும் நிலமில்லா கிராமப்புற தொழிலாளர்களுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மானியத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் அவையை விட்டு வெளியேறினர். அப்போது பேசிய முதலமைச்சர், ''நாட்டில் அமலாக்கத் துறைக்கு சிறப்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அது நாட்டின் நலனுக்காக இல்லை. ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் வழங்கும் நடவடிக்கையை நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம் - நீடிக்கும் பாஜக - காங்கிரஸ் வார்த்தைப்போர்!