டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆரம்ப முயற்சிகளின் விளைவாகவே இன்று சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது எனக் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கட்சியின் சார்பாகச் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் பெயரிடப்படாத இடத்தில் ரோவர் தரையிறக்கப்பட்டு நிலவிற்கு விண்கலம் அனுப்பி மூன்று நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த இடம் இதுவரை எந்த விண்கலமும் பயணம் செய்யாத பகுதியில் தற்போது இந்தியாவின் விண்கலம் சந்திரயான்-3 தரையிறக்கப்பட்டுள்ளது. நிலவிலும் அதற்கு அடுத்துள்ள பகுதியிலும் இந்தியாவின் பயணம் என்பது பெருமைப்படக்கூடியவை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவியல் பார்வை மற்றும் தொலைநோக்கு சிந்தனை ஆகியவை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்ததே தற்போது சந்திரயான்-3 பெற்றுள்ள வெற்றி என ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:India is on the moon: "இந்தியா நிலவின் மீது உள்ளது" - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்!
காங்கிரஸ் தரப்பில், இது ஒவ்வொரு இந்தியரின் கூட்டு வெற்றி மற்றும் இஸ்ரோவின் தொடர்ச்சியான சாதனைகள் உண்மையில் பாராட்டக்கூறியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே கூறுகையில், 140 கோடி மக்களைக் கொண்ட தேசம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இஸ்ரோவின் வெற்றி 6 தலைமுறை விண்வெளி ஆராய்ச்சிக்கு கிடைத்தது. இஸ்ரோவை உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது. இது இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமையாகும். மேலும் இந்த வெற்றி இந்தியாவின் விஞ்ஞானிகள், விண்வெளி பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்குக் கிடைத்தது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, எல்லோருக்கும் முன்னோடியாகச் சாதனைப்படைத்த இஸ்ரோவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்கியது இது நமது விண்வெளி ஆராய்ச்சியின் கடின உழைப்பின் மூலம் கிடைக்கப் பெற்றது. 1962ஆம் ஆண்டு முதன்முதலின் இந்தியாவின் விண்வெளித் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது புதிய உயரத்தைத் தொட்டுள்ளது. இது இந்தியாவின் இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் பொது செயலாளர்களின் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், தொடர்ச்சியான இஸ்ரோவின் சாதனைகள் அற்புதமானது. தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவும் உள்ளது. இன்று ஓட்டு மொத்த உலகமே இஸ்ரோவின் சாதனைகளை ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தியர்களாகிய எங்களுக்குப் பெருமையாகும் என வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:India on Moon: நிலவைத் தொட்டது சந்திரயான் 3 லேண்டர் விக்ரம்!