ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் மாபெரும் ’ராக்கெட் எல்விஎம்3-எம்2’ இன்று (ஆக்.23) வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. 36 செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ’சந்திரயான் - 3’ விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆக.23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,“சந்திரயான் 3 கிட்டவிட்ட தயார் நிலையிலுள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் எல்லாம் முடிந்துள்ளது. இருப்பினும் இன்னும்சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. அதனால் அதைச் சற்று தாமதித்தே ஏவவுள்ளோம். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது ஜூன் மாதத்தில் சந்திரயான் 3-ஐ ஏவவுள்ளோம்” எனத் தெரிவித்தார் .