டெல்லி:நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் தற்போது நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 லேண்டரை படம் பிடித்து அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை ரேடார் (DFSAR) கருவி மூலம் படம்பிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 லேண்டர் நிலவின் மென்மையான தரையிறக்கத்திற்காக, சந்திரயான்-2 ஆர்பிட்டர் உடன் இருவழி இணைப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நாசா (NASA) விண்கலம் லூனார் ரெசொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் (LRO) சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தினையும், சந்திரயான்-3 லேண்டரையும் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
சந்திரயான்-2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு முன்பு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து 4 ஆண்டுகளுக்கு பின், சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் இந்தியா மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்தது. மேலும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
இதையும் படிங்க:ஆதித்யா எல்1 செல்பி கிளிக்கை வெளியிட்ட இஸ்ரோ!