புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசின் அமைச்சரவை விரிவாக்கம் நாளை (ஜுன் 27) ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்துக்காக புதிய அமைச்சர்கள் பட்டியலை கடந்த 23ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார். இந்தப் பட்டியலில் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
புதிய அமைச்சர்களின் பட்டியல் குறித்து ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து நாளை (ஜூன் 27) ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சந்திர பிரியங்கா, அத்தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் ஆவார்.
இந்நிலையில் இன்று ஈடிவி பாரத்திற்குப் பிரத்யேகமாக பேட்டி அளித்த சந்திர பிரியங்கா, " சட்டப்பேரவை தேர்தலில் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தற்போது அமைச்சராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஒட்டு மொத்த புதுச்சேரி பெண்களுக்கும் கிடைத்த வெற்றி. எனக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியில் திறம்பட செயலாற்றி மாநில மக்களின் நம்பிக்கையைப் பெறுவேன்" என்று கூறினார்.
அமைச்சர் பதவி ஒட்டுமொத்த பெண்களுக்கும் கிடைத்த வெற்றி - சந்திர பிரியங்கா - 40 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் பெண் அமைச்சர்
அமைச்சர் பதவியில் திறம்பட செயலாற்றி மாநில மக்களின் நம்பிக்கையைப் பெறுவேன் என்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் பெண் அமைச்சராகும் சந்திர பிரியங்கா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
சந்திர பிரியங்கா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி
இதையும் படிங்க: புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர்