தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆந்திராவிற்கு 1 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு முடிவு' - கரோனா தடுப்பூசிகள்

அமராவதி: ஆந்திர மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஒரு கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

jagan-mohan-reddy
jagan-mohan-reddy

By

Published : Dec 5, 2020, 11:00 AM IST

இது குறித்து ஆந்திர சட்டப்பேரவையில் அவர், "ஆந்திர மாநிலத்திற்கு முதல் கட்டமாக ஒரு கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் முதல் 7 லட்சம் தடுப்பூசிகள், முதல்நிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து 3.6 லட்சம் தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சுகாதாரத் தொழிலாளர்களுக்கும், மீதமுள்ள 90 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "தடுப்பூசிகளின் விநியோகம், சேமிப்பு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அரசு வழிகாட்டுதல்களை வகுத்துவருகிறது. அத்துடன் தடுப்பூசியை 2-8 டிகிரி சென்டிகிரேட் குளிரில் வைக்க சேமிப்பு அலகுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. அப்பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளன.

தடுப்பூசிகளைச் செலுத்த 19 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் தயாராக உள்ளனர். கூடுதல் தேவைக்காக ஆஷா பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆந்திர மழை பாதிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details