தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாஸ்க் கட்டாயமா? - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சொன்னது இதுதான்

பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்குமாறும், எந்த சூழ்நிலை வந்தாலும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா

By

Published : Dec 21, 2022, 10:46 PM IST

Updated : Dec 21, 2022, 11:03 PM IST

டெல்லி: உலகளவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சீனத் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில், மக்கள் போராட்டத்தால் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. பிரேசில், அமெரிக்கா, மற்றும் பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொது வெளியில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து மக்களிடையே வலியுறுத்துவது, நாட்டில் தற்போது நிலவும் கரோனா நிலவரங்கள் குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவிய தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா இன்னும் முடிவடையவில்லை, விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கவும் அளவுக்குத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:குஜராத், ஒடிசாவில் கரோனா பி.எஃப் 7 வைரஸ் கண்டுபிடிப்பு! - மீண்டும் கரோனாவா?

Last Updated : Dec 21, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details