தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2021, 5:21 PM IST

Updated : Jun 21, 2021, 7:08 PM IST

ETV Bharat / bharat

யானைப் பசிக்கு சோளப் பொரியா? தடுப்பூசி குறித்து மணீஷ் சிசோடியா!

தேசிய தலைநகர் டெல்லிக்கு ஜூலை மாதத்தில் வெறும் 15 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட உள்ளன. இதே எண்ணிக்கை தொடர்ந்தால் மாநில மக்களுக்கு தடுப்பூசி வழங்க 16 மாதங்கள் பிடிக்கும் எனத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

Sisodia
Sisodia

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை டெல்லியில் காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

அப்போது அவர் கூறுகையில், “கடந்த 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார். இந்தத் திட்டம் ஜூன் 21ஆம் முதல் அமலுக்குவரும்” என்றும் கூறினார்.

எனக்கு தெரிந்தவரை ஜூன் 2ஆம் தேதிக்கு பின்னர் இலவச தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அடுத்த மாதம் (ஜூலை) மத்திய அரசு 15 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்ந்தால் மாநில மக்களுக்கு தடுப்பூசி வழங்க 15 முதல் 16 மாதங்கள் வரை பிடிக்கும்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “உலகளவில் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட நாடாக இந்தியாவை கூறுகிறீர்கள். ஆனால் தடுப்பூசி நிர்வாகம் தடம்மாறி குழப்பமான சூழ்நிலையில் தற்போது சென்றுகொண்டிருக்கிறது” என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க : விரைவில் மூன்றாவது அலை- மாநிலங்களின் நிலை என்ன?

Last Updated : Jun 21, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details