வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதையடுத்து, மத்திய அரசு டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக அழைத்த நிலையில் விவசாயிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். அந்தப் பேச்சுவார்த்தைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தங்களை அவமதிப்பதுபோல் உள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.