தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைப் பொருள் விற்பனை: நைஜீரியர் உள்பட இருவர் கைது - drug peddlers related news

பெங்களூரு: போதைப் பொருள்களை விற்ற நைஜீரியர் உள்ப்ட இருவரை மத்திய குற்றப் பிரிவினர் (சிசிபி) கைது செய்தனர்.

CCB arrest two drug peddlers
நைஜீரியர் உள்பட இருவர்

By

Published : Jan 28, 2021, 3:47 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எம்டிஎம்ஏ எனப்படும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சி.சி.பி., இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் உத்தரவின் பேரில் மத்திய குற்ற பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் நைஜீரியாவைச் சேர்ந்த டியோ மையாண்டே, கேரளாவைச் சேர்ந்த நிஷான் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்த 500கி எடையுள்ள போதைப்பொருள், ரூ.25 லட்சம், மூன்று செல்போன்கள், ஹோண்டா பைக் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:சட்டவிரோத பண பரிமாற்றம்: உ.பி.,யில் சீனர் கைது!

ABOUT THE AUTHOR

...view details