டெல்லியில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து - CBSE Class XII examinations cancelled
19:28 June 01
கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி, "சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்தானது, மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். பேரிடர் காலத்தில் மாணவர்கள் மனஅழுத்தில் உள்ளனர். அவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்தக்கூடாது" எனத் தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, 12ஆம் வகுப்புத் தேர்வை மாணவர்களின் நலன்கருதி ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை: முதலமைச்சர், சபாநாயகர் சந்திப்பு