மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் வன்முறை குறித்த வழக்கு கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே வன்முறை வெடித்தது.
இதில், பாஜகவினர் பெரும் பாதிப்புக்குள்ளானதாக அக்கட்சியினர் வழக்குத் தொடர்ந்தனர். சம்பவம் தொடர்பாக உரிய நீதி விசாரணை நடைபெற வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட கல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது. மேலும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையை கண்காணிப்பார் எனவும் உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.