சத்ரா (ஜார்க்கண்ட்):பேங்க் ஆஃப் இந்தியா சமார்யா கிளையில் நடந்த 50 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.
இந்த கிளையில் காசாளராக பணிபுரிபவர் பியாரி பாக்லா, இவர் வங்கி மேலாளர் கன்ஹயா குமாரின் கடவுச்சொல்லை பயன்படுத்தி தனது கணக்கிற்கு வெவ்வேறு தேதிகளில் அனுப்பியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் கணக்கில் உள்ள பணத்தை வேறு கணக்குகளுக்கும் ஒரு தனியார் நிறுவன கணக்கிற்க்கும் மாற்றியுள்ளார்.
வங்கியில் ஊழல் நடந்ததையடுத்து, முழுவதமாக விசாரிக்க வங்கி மேலதிகாரிகள் உத்தரவிட்டனர். துணை மண்டல அதிகாரி கிளையின் மேலாளரை பணியிடை நீக்கம் செய்தார். துணை மேலாளர் சம்ஸீர் , காசாளர் பாக்லா மற்றும் துணை அலுவலர் ஆசிஸ் குமார் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் காசாளர்தான் வங்கி கணக்கிலிருந்து பணம் மாற்றியதும், அதற்காக மேலாளரின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தியதும் தெரியவந்தது. வங்கியில் கொள்ளை நடந்ததை சாதகமாக்கி இச்செயலில் ஈடுபட்டுள்ளார். ஊழல் நடந்து 15 நாட்கள் கழித்தே கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக இதற்கு காரணமான காசாளர் மற்றும் உடந்தையாகன இருந்த 3 வங்கி ஊழியர்கள் பண்யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு பெண் ஊழல் செய்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:லக்கிம்பூர் வன்முறையில் கைதான அமைச்சர் மகனின் பிணை மனு தள்ளுபடி