அம்பாலா: ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பஞ்சாபின் திவானா கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காரில் டிச.4 ஆம் தேதி ஹரியானா சென்றனர். கார் நர்வானா கிளை கால்வாயில் விழுந்ததில் பரிதாபமாக அவர்கள் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகளும் அடங்குவர். நாகல் காவல் நிலைய போலீசார் 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாகல் போலீசார் கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்பீர் சிங்கின் குடும்பத்தினர் மாருதி காரில் ஹரியானா சென்று கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை (டிச.4) காலை 11 மணியளவில் நர்வானா கிளை கால்வாயில் கார் விழுந்தது. திங்கள்கிழமை (டிச.5) காலை தகவல் கிடைத்தது. சுமார் இரண்டரை மணி நேரம் போராடி காருடன் நான்கு உடல்களும் மீட்கப்பட்டன என கூறினர்.