தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸிற்கு டா டா... தனிக்கட்சி... கேப்டன் அமரீந்தர் அதிரடி! - புதிய கட்சி

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு (2022) தேர்தல் நடைபெறுகிறது.

Amarinder Singh
Amarinder Singh

By

Published : Oct 27, 2021, 12:38 PM IST

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், புதன்கிழமை (அக்.27) தனிக்கட்சி தொடங்கபோவதாக அறிவித்தார்.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸின் அனுபவமிக்க தலைவர்களுள் ஒருவருமான கேப்டன் அமரீந்தர் சிங் இன்று புதிய கட்சி தொடங்குவதாக கூறினார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற்றது.

முன்னதாக, கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நீடித்துவந்தது. இந்நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பொறுப்பை துறந்தார்.

அதன்பின்னர் மாநிலத்தின் முதலமைச்சராக பட்டியலின பிரிவைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மாநிலத் தலைவர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து.

நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜினாவுக்கு இரு வேறு காரணங்கள் கூறப்பட்டன. கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிறகு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று சித்து எதிர்பார்த்தார். ஆனால், கட்சித் தலைமை அவரை நம்பவில்லை.

காங்கிரஸ் கட்சி நகைச்சுவை காட்சியாக மாறிவிட்டது- ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

அதேநேரம், சரண்ஜித் சிங் சன்னி அமைச்சரவையில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க சித்து விரும்பினார். அதுவும் வெற்றிபெறவில்லை. இதுவே சித்துவின் ராஜினாமாவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.

எனினும் இது குறித்து சித்து இதுவரை வாய் திறக்கவில்லை, தாம் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வதாக கூறியுள்ளார். இதற்கிடையில் முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். இந்நிலையில் தற்போது தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மாநிலத் தலைமை, “கட்சி விசுவாசிகள் யாரும் கேப்டன் பக்கம் செல்லமாட்டார்கள். நாங்கள் கேப்டனுக்கு முழு அதிகாரமும் கொடுத்தோம். ஆனால் கேப்டன் அந்த அதிகாரத்தை யாருக்கும் பகிர்ந்து அளிக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. இதே கருத்தை முன்னாள் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் ஆமோதித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமையை விமர்சித்த கேப்டன் அமரீந்தர் சிங், “ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அனுபவமற்றவர்கள். அவர்கள் சரியாக, தவறான முறையில் வழிநடத்தப்படுகின்றனர்” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

கேப்டன் அமரீந்தர் சிங், மூன்று முறை பஞ்சாப் முதலமைச்சர் உள்பட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு (2022) தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 5 மாநிலத் தேர்தல்.. காய்நகர்த்தும் காங்கிரஸ்.. சோனியா தலைமையில் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details