தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கனடாவின் ஆபத்தான குற்றவாளிகள் 11 பேரில் 9 பேர் இந்தியர்கள்... - வான்கோவர் காவல் துறை

கனடா நாட்டில் 11 பேர் கொண்ட மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் பட்டியலில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கனடாவின் ஆபத்தான குற்றவாளிகள் 11 பேரில் 9 பேர் இந்தியர்கள், CANADA MOST WANTED LIST
கனடாவின் ஆபத்தான குற்றவாளிகள் 11 பேரில் 9 பேர் இந்தியர்கள்

By

Published : Aug 5, 2022, 1:20 PM IST

சண்டிகர்:கனடா நாட்டின்பிரிட்டிஷ் கொலம்பியா மகாணத்தின் சிறப்பு அமலாக்கப்பிரிவு நேற்று முன்தினம் (ஆக. 3) ட்விட்டரில் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதில்,"கும்பல் மோதல்களிலும், தீவிர வன்முறையிலும் தொடர்ந்து ஈடுபடுவதால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில் ஏற்படுத்தும் 11 நபர்களை வான்கோவர் காவல் துறை மற்றும் பிசி ராயல் கனடியன் மௌண்டட் காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து அடையாளம் காண்டுள்ளோம்.

இந்த 11 நபர்களின் பட்டியலை வெளியிடுவதன் மூலம், மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு எச்சரிக்கையும் அறிவிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது. பட்டியலில், ஷகீல் பாஸ்ரா (28), அமர்பிரீத் சாம்ரா (28), ஜக்தீப் சீமா (30), ரவீந்தர் சர்மா (35), பரிந்தர் தலிவால் (39), ஆண்டி செயின்ட் பியர் (40), குர்பிரீத் தாலிவால் (35), ரிச்சர்ட் ஜோசப் விட்லாக் (40), அம்ரூப் கில் ( 29), சுக்தீப் பன்சால் (33), சும்திஷ் கில் (28) ஆகியோரின் பெயர்கள் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளன.

இதில், ஆண்டி செயின்ட் பியர் மற்றும் ரிச்சர்ட் ஜோசப் விட்லாக் ஆகியோரை தவிர அனைவரும் பஞ்சாப்பை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களின் மீதும் கூட சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:நானும் போலீஸ்தான்யா... பகலில் போலீஸ்... இரவில் திருடன்...

ABOUT THE AUTHOR

...view details