தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 17, 2021, 3:23 PM IST

Updated : Jun 17, 2021, 3:30 PM IST

ETV Bharat / bharat

மை லார்ட் வேணாம், மேடம் போதும்!

தன்னை, 'மை லார்ட்' (My lord) என்று அழைக்க வேண்டாம், 'மேடம்' (Madam) என்று அழைத்தாலே போதுமானது என்று கூறி பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி முலிமணி.

High Court Justice Jyoti Mulimani  not My Lord  court reference  Justice Krishna Bhatt Panjigadde  madam reference in HC  Call me Madam, not My Lord  மைலாட் வேணாம்  மேடம்  ஜோதி முலிமணி  முலிமணி
High Court Justice Jyoti Mulimani not My Lord court reference Justice Krishna Bhatt Panjigadde madam reference in HC Call me Madam, not My Lord மைலாட் வேணாம் மேடம் ஜோதி முலிமணி முலிமணி

பெங்களூரு: 'மை லார்ட்' என்ற வார்த்தையை தவிர்த்த இரண்டாவது நீதிபதியாக ஜோதி முலிமணி (Jyoti Mulimani) திகழ்கிறார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி முலிமணி. இவர் இன்று (ஜூன் 17) வழக்கு ஒன்றை விசாரித்தார். அப்போது வழக்குரைஞர்களிடம் தன்னை, 'மை லார்ட்' என்று அழைக்க வேண்டாம், 'மேடம்' என்றாலே போதும் என பெருந்தன்மையுடன் கூறினார்.

இதற்கு முன்னர் நீதிபதி கிருஷ்ணா பட், வழக்குரைஞர்களிடம் 'மை லார்ட்' என்ற வார்த்தையை தவிர்த்து 'சார்' என்ற வார்த்தையை உபயோகிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

அவர், ஏப்ரல் 17ஆம் தேதி வழக்கொன்றை விசாரித்தார். அப்போது, சார் என்பதே மரியாதைக்குரியதுதான். மை லார்ட் என்ற வார்த்தையை தவிர்க்கலாம் என வழக்குரைஞர்களிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சார் அல்லது மேடம் என்ற வார்த்தையை உபயோகிக்கலாம் என வழக்குரைஞர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் இது தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மை லார்ட் என்ற வார்த்தை தவிர்க்கப்படும்பட்சத்தில் ஆங்கிலேய ஆட்சிகாலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு பழங்கால நடைமுறை முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'காணாமல்போன கோயில் சிலைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுங்கள்' - உயர் நீதிமன்றம்

Last Updated : Jun 17, 2021, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details