சிம்லா:ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டம் பர்வானூவில் இயக்கப்பட்டுவந்த கேபிள் கார் இன்று (ஜூன் 20) தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் நின்றது. இந்த காரின் உள்ளே 15 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து பர்வானூ போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நடுவானில் சிக்கிய கேபிள் கார்... 15 பேர் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரம்... - ஹிமாச்சல் கேபில் கார் விபத்து
ஹிமாச்சல பிரதேசத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் கேபிள் கார் நின்றதில் 15 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர்.
இதனடிப்படையில் போலீசார் மாநில பேரிடர் மீட்புக்குழுவினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த விபத்து 1.30 மணியளவில் நடந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். ஒவ்வொருவராக மீட்டுவருகிறோம். 11 பேரை மீட்டுள்ளோம். மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணி நடந்துவருகிறது. விரைவில் அனைவரையும் மீட்போம்" எனத் தெரிவித்தனர். இதனிடையே தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் சம்பவயிடதிற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேரளாவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் பலி- திக்திக் சிசிடிவி காட்சிகள்