தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

7 மெகா ஜவுளி பூங்காக்கள், 21 லட்சம் வேலைவாய்ப்பு - புதிய திட்டம் அறிவிப்பு - கேபினெட் அறிவிப்புகள்

நாடு முழுவதும் ஏழு மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைத்து 21 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Union Cabinet
Union Cabinet

By

Published : Oct 6, 2021, 7:14 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜவுளித்துறை சார்ந்து மெகா அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிரதமர் மித்ரா என்ற பெயரில் ரூ.4,445 கோடியில் ஏழு மெகா ஜவுளிப் பூங்காக்கள் இத்திட்டத்தில் கீழ் உருவாக்கப்படவுள்ளன. இந்த திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஏழு லட்சம் பேருக்கு நேரடியாகவும், 21 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜவுளித்துறைக்கு சிறந்த எதிர்காலம்

இந்தியாவின் ஜவுளிக்கு சர்வதேச அளவில் பெரும் தேவை உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ள மத்திய மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, ஆந்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய பத்து மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, 66 ஜவுளிப் பூங்காக்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மெகா ஜவுளிப்பூங்காக்கள் குறைந்தது ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அக்.12 முதல் விஜய் யாத்திரை - தேர்தலுக்கு தயாராகும் அகிலேஷ்

ABOUT THE AUTHOR

...view details