தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொது இடங்களில் வைஃபை வசதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - பொது இடங்களில் வைஃபை வசதி

டெல்லி: பொது இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை

By

Published : Dec 9, 2020, 7:53 PM IST

நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை வசதியை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. PM-WANI (WIFI Access Network Interface) என்ற திட்டத்தின் மூலம் பொது இடங்களில் வைஃபை வசதியை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்தது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து கூறுகையில், "PM-WANI திட்டத்தின் மூலம் நாட்டில் வைஃபை புரட்சி ஏற்படவுள்ளது.

நாடு முழுவதும் 1 கோடி வைஃபை மையங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொச்சி, லட்சத்தீவுகளுக்கிடையே கடலுக்கு அடியில் ஆப்டிகல் ஃபைபர் கேபிளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வணிகர்கள் பணியமர்த்தலை மேற்கொண்டு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 22,810 ரூபாய் மதிப்பில் புதிய வேலைவாய்ப்பு திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், 58.5 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details