தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - ஒன்றிய அமைச்சகம்

சுமார் 11.56 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனாஸாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

By

Published : Oct 6, 2021, 5:04 PM IST

நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை அறிவிப்பை ஒன்றிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2020-21 நிதியாண்டில் குரூப்-சி,டி பிரிவில் பணிபுரியும் 11 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் அரசுக்கு ரூ.1,985 கோடி செலவு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். ரயில்வேயின் ஆர்பிஎஃப், ஆர்பிஎஃப் ஊழியர்களுக்கு இந்த போனாஸ் அறிவிப்பு பொருந்தாது.

இதையும் படிங்க:2021 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற இருவர்

ABOUT THE AUTHOR

...view details