டெல்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 42 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
மத்திய அரசு பணியாளர்களுடன் சேர்த்து ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியும் 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார். இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் அனுராக் தாகூர் கூறி உள்ளார்.