மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்துகொண்ட ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அந்த விவகாரத்தால் ஷாருக் கானுக்கு பல பஞ்சாயத்துகள் வரத் தொடங்கியுள்ளன.