தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 2, 2021, 12:06 PM IST

ETV Bharat / bharat

காஷ்மீர்மயமாகும் டெல்லி... விவசாயிகளைத் தடுக்க இரும்பு முள்வேலி: குரல் கொடுத்த ராகுல்!

டெல்லி: தலைநகரில் விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குப் பாலமாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கல்லாக இருக்கக் கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல முயற்சிகளின் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்குப் பாலமாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கல்லாக இருக்கக் கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இக்கருத்தை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியுடனான உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து விவசாயிகளை உள்ளே நுழைய முடியாதவாறு செய்துள்ளனர். டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கிடையே இரும்புக் கம்பியை இணைத்து போராட்டக்காரர்களின் நடமாட்டத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசு, விவசாய சங்கங்களுக்கிடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தாலும், அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியாமலும் இழுபறியிலேயே தொடர்கிறது.

ABOUT THE AUTHOR

...view details