தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டான்களுக்கு சீட் இல்லை - முக்தார் அன்சாரிக்கு 'நோ' சொன்ன மாயாவதி - பீம் ராஜ்பர்

2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் டான்கள், மாஃபியாக்களுக்கு சீட் அளிக்க முடியாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மாயாவதி
மாயாவதி

By

Published : Sep 10, 2021, 4:48 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பணிகளை அனைத்து முன்னணி கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் பாஜக தர்மேந்திர பிரதான் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தேர்தலுக்கு முன்னதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரப்போகும் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி டான்களுக்கும், மாஃபியாக்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்க போவதில்லை என்றார்.

முக்தார் அன்சாரிக்கு வாய்ப்பில்லை

பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரான முக்தார் அன்சாரி கிரிமினல் குற்ற நடவடிக்கை காரணமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். உத்தரப் பிரதேசத்தின் முன்னணி கேங்க் ஸ்டாரான முக்தார் அன்சாரிக்கு அவரின் மௌ தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படாது என மாயாவதி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

மாயாவதி ட்வீட்

அவருக்கு பதிலாக கட்சியின் மாநிலத் தலைவர் பீம் ராஜ்பர் போட்டியிடுவார் என மாயாவதி கூறியுள்ளார். மாயாவதியின் இந்த அறிவிப்பை அடுத்து அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி முக்தார் அன்சாரிக்கு வாய்ப்பளிக்க முன்வருவதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:திருச்சி உள்ளிட்ட 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்க அரசு ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details